நெய்வேலியில் ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.10 லட்சம் கருணை தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
நெய்வெலியில் நடைபெற்ற போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு அறவழியில் போராடுவதற்குத்தான் அனுமதி வழங்கியது என்று கூறியுள்ளார்.
மேலும், என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் பரவனாற்றில் மாற்றுப்pபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,. 2006 முதல் 2013 ஆம் ஆண்டு வரை அங்குள்ள 352 விவசாயிகளிடம் இருந்து 104 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்ட நிலையில் கூடுதலால ரூ.10 லட்சம் கருணை தொகை வழங்கப்படவுள்ளது. நில உரிமையாளர்கள் 1888 பேருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
''என்.எல்.சி நிறுவனம் இந்த நிலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதமே விளை நிலங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பயிர்களுக்கு இழப்பீடு கொடுக்க என்.எல்.சி நிர்வாகம் முன்வந்துள்ளது'' என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியது குறிப்பிடத்தக்கது.