கடலூரில் நடைபெற்று வரும் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் இன்று நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
ஒருசில பாமகவினர் உள்ளே செல்ல முயன்றபோது, போலீசின் தடுப்பை மீறி முன்னேறிச் செல்ல முயன்றபோது, போலீசாருக்கும் பாமகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.
பாமகவினரின் முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசப்பட்டன. இந்த இடம் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக தகவல் வெளியாகும் நிலையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் கடலூர், நெய்வேலிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.