கேரள ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 44 கவுன்சிலர்கள்: என்ன நடக்குது நெல்லையில்?

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (12:49 IST)
கேரள ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 44 கவுன்சிலர்கள்: என்ன நடக்குது நெல்லையில்?
நெல்லை மாநகராட்சியில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 55 வார்டுகளில்  44 பேர் திமுகவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நெல்லை திமுக பிரமுகர் ஒருவர் கேரளாவில் உள்ள ரிசார்ட்டுக்கு வெற்றி பெற்ற அனைவரையும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நெல்லை மாநகராட்சி தேர்தலில் திமுக 44 இடங்களிலும், அதிமுகவினர் நான்கு இடங்களிலும், காங்கிரஸார் 3 இடங்களிலும், சிபிஐ மதிமுக முஸ்லிம் லீக் முயற்சி ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனது.
 
 இந்த நிலையில் நெல்லை மேயர் பதவியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வெற்றிபெற்ற அனைத்து வார்டு கவுன்சிலர் களையும் கேரளாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திமுக பிரமுகர் ஒருவர் வைத்திருப்பதாகவும் மார்ச் 4ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெறும் அன்றுதான் நெல்லைக்கு அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்