இனிமே பஸ்ல சத்தமா பேச, பாட்டு கேட்க தடை! – கேரள அரசு உத்தரவு!

ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (10:54 IST)
கேரள அரசு பேருந்துகளில் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டுக் கேட்கவோ தடை விதிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள அரசின் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பலர் செல்போன்களில் சத்தமாக பேசுவதும், சத்தமாக பாடல்கள் வைத்து கேட்பதும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கேரள போக்குவரத்து கழகம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பேருந்துகளில் சத்தமாக பேசுவது, பாடல் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்