தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி செய்யுங்க! – மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் அழைப்பு!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (10:46 IST)
மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நிலவி வரும் நிலையில் அம்மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் வந்து பயிற்சி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.



மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் தொடங்கிய சண்டை கலவரமாக மாறியுள்ளது. தொடர்ந்து அங்கு கலவரம் நடந்து வரும் நிலையில் துணை ராணுவம், காவல் துறையினர் கலவரத்தை அடக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளன. இந்நிலையில் மணிப்பூர் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பயிற்சி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் வந்து பயிற்சி மேற்கொள்ளுமாறு மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் உயர்தர பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்