நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்ட ராஜேந்திர பாலாஜி – ஸ்டாலின் கண்டனம்

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (12:35 IST)
இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் செய்தி சேனலில் நேர்காணல் ஒன்றில் பேசிய அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இஸ்லாமிய அமைப்புகள் சில செயல்படுவதாகவும், அப்படி செயல்பட்டால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் ” நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்