டெஸ்லா இந்திய சந்தைக்கு புதுப்பிக்கப்பட்ட மாடல் Y காரை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்பல் நிறத்தில், கருப்பு அலாய் வீல்களுடன், நேர்த்தியான, கூபே போன்ற வடிவமைப்பில் இருக்கும் இந்த மாடல் லாங் ரேஞ்ச் RWD (Long Range RWD) மற்றும் லாங் ரேஞ்ச் AWD (Long Range AWD) ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும்.
மாடல் Y ஆனது இரட்டை வண்ண கருப்பு மற்றும் வெள்ளை கேபினுடன் குறைந்தபட்ச வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் 15.4 அங்குல மைய தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜிங், USB-C போர்ட்கள், குரல் கட்டளைகள், இணைய இணைப்பு மற்றும் செயலி அடிப்படையிலான வாகன அணுகல் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. டெஸ்லா மாடல் Y இன் விலை ரூ. 60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.