இந்த விவகாரம் அந்த பகுதியில் உள்ள தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில், கருப்பு பெயிண்ட் வீசிய மர்ம நபர்களைப் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றி அவமதித்தது யார் என்பது குறித்து சி.சி.டி.வி. கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் கண்டிப்பாக பிடிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.