இந்நிலையில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் “பொருளாதாரம் தாண்டி வரலாறு, பண்பாடு, என்று தன் தாக்குதல் எல்லையை நிர்மலா சீதாராமன் விரிவுப்படுத்தியுள்ளார்” என கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது, தமிழகத்தை சேர்ந்த எதிர்கட்சியினர் ”கீழடி” என கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.