அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உச்சநீதிமன்றத்தில் மீது இன்று விசாரணை

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (07:50 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இன்றைய விசாரணைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அமைச்சரின் உடல்நலத்தை கணக்கில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பினர் வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்