அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அளித்த புகாரில் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததால் நீண்ட நாட்களாக அவர் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் தான் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று கூறப்படுவதால் அமைச்சர் பதவியை பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவரிடம் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.