கருமுத்து கண்ணன் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (12:52 IST)
மதுரையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மீனாட்சியம்மன் கோவில் தக்காரும், தியாகராஜர் குழும தலைவருமான கருமுத்து கண்ணன் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள், அதனை தொடர்ந்து கருமுத்து கண்ணன் உடலுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
 
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் மூர்த்தி, பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருமுத்து கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் "கருமுத்து கண்ணன் கல்வி, ஆன்மிகம் இன கண்களாக கொண்டு செயல்பட்டவர், கல்வி பணிகளுக்கு கருமுத்து கண்ணன் பணியாற்றி உள்ளார்.
 
கருமுத்து கண்ணன் மறைவு பேரிழப்பாகும்" என கூறினார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஆகியோர் கருமுத்து கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள், அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருமுத்து கண்ணனின் நினைவுகளை கூறி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார், பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில் "கருமுத்து கண்ணன் நட்புக்கு இலக்கணம் ஆவார், என் உடல்நிலை குறித்து அவ்வப்போது நலம் விசாரிப்பார், தந்தையை போலவே தமிழுக்காக கருமுத்து கண்ணன் பாடுபட்டவர், அரசியல் கட்சிகளின் எல்லையை கடந்தவர் கருமுத்து கண்ணன், கருமுத்து கண்ணன் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது" என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்