மின்வாரியத்திற்கு தனியார் மூலமாக பணியாளர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
தமிழக மின்வாரியத்திற்கு ஹேங்மேன் பணிகளுக்கான பணி நியமனம் தனியார் மூலமாக நிரப்பபடுவதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் வழக்கு தொடர்ந்துள்ளதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அமைச்சர் தங்கமணி “மின்வாரியத்தில் உள்ள காலி இடங்களை தற்காலிகமாக நிரப்ப மட்டுமே தனியார் பணியாளர்கள் ஒரு சில இடங்களில் நியமிக்கப்பட்டனர். மின்வாரியத்திற்கு தனியார் மூலம் 30 ஆயிரம் பணியாளர்களை நியமிக்கும் ஆணை ரத்து செய்யப்பட்டு விட்டது. தொழிற்சங்கங்கள் கேஸை வாபஸ் வாங்கி விட்டால் உடனடியாக மின் வாரியத்தில் 10 ஆயிரம் பேரை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் எண்ணம் என்றும் தமிழக அரசுக்கு இல்லை” என தெரிவித்துள்ளார்.