காலியாகிறதா நாம் தமிழர் கூடாரம்? – அதிமுகவில் இணையும் நா.த.க பிரபலம்!

திங்கள், 21 டிசம்பர் 2020 (12:53 IST)
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து விலகிய பிரபலம் ஒருவர் முதல்வர் தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரபல கட்சியின் பிரமுகர்கள் கட்சி மாறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் முக்கியமானவரும், கட்சியின் முதுகெலும்பாகவும் கூறப்பட்ட பேரா.கல்யாணசுந்தரம் கட்சியில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேரா.கல்யாணசுந்தரத்திற்கு நாம் தமிழர் கட்சியில் செல்வாக்கும், ஆதரவாளர்களும் இருந்ததால் அவர் அதிமுகவில் இணைந்தால் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைவார்கள் என்றும், இது நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்