நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

Prasanth Karthick

ஞாயிறு, 24 நவம்பர் 2024 (14:08 IST)

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ள நிலையில், நாளை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி நாளை மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஏற்கனவே கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை தொடங்கி தூத்துக்குடி, குமரி வரை கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளையும் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்