இந்நிலையில் காசிமேடு மீனவர்களும் கடந்த சில வாரங்களாக கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீனவர்கள் கடலுக்குள் செல்லும் முன்னர் படகிற்கு பூஜை செய்து வழிபட்டு பின்னர் புறப்படுவது வழக்கம். வழக்கம்பொல காசிமேடு துறைமுகப்பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல இருந்த விசைப்படகு ஒன்றில் பூஜை செய்யப்பட்டுள்ளது. கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த போது கற்பூரம் படகில் விழுந்து தீப்பற்றியது. தீயை அணைக்க பலர் முயன்றும் மளமளவென பரவிய தீ படகு முழுவதையும் பற்றிக் கொண்டது. துறைமுக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தும் படகு முழுவதும் எரிந்து போனதால் மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.