தற்போது 300 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சில்லறை விலையில் தக்காளி விலை 200 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள 300 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது
இந்த நிலையில் தற்போது கூடுதலாக 200 ரேஷன் கடைகளில் அதாவது மொத்தம் 500 ரேஷன் கடைகளில் நாளை முதல் 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.