எக்கச்சக்கமாய் எகிறிய தக்காளி விலை! மார்க்கெட் நிலவரம்! – அதிர்ச்சியில் மக்கள்!

திங்கள், 31 ஜூலை 2023 (08:41 IST)
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று சென்னை மார்க்கெட்டில் தக்காளி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.



வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதுமே தக்காளி விலை உயர்வை சந்தித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகபட்சமாக தக்காளி கிலோ ரூ.170 வரை உயர்ந்தது. பின்னர் கடந்த வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைந்து ரூ.100 வரை விற்பனையானது.

இந்நிலையில் இந்த வாரத்தில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.10 விலை உயர்ந்து ரூ.160க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று மேலும் ரூ.20 விலை உயர்ந்து ரூ.180 ஆக விற்பனையாகி வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் தக்காளி கிலோ ரூ.200 வரை விற்பனையாகி வருகிறது.
தக்காளி நாளுக்கு நாள் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்