11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறதா? கல்வி அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (11:25 IST)
11ம் வகுப்பு தேர்வு ரத்து உள்பட பல்வேறு பல்வேறு ஆலோசனைகளை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை செய்து வருகிறார். 
 
பிளஸ் டூ பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சன்ட் ஆனது குறித்து இந்த ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பதினோராம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யலாமா என்பது குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். 
 
இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் சந்திப்பார் என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் சில அதிரடி அறிவிப்புகள் பள்ளி கல்வித்துறை இடம் இருந்து வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்