தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகேயுள்ள தாளாக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் மகள் விஷாலி(17 வயது) இவர் அங்குள்ள பசுபதி கோவில் புனித கரிபியல் பெண்கல் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால், தேர்வு எழுதிவிட்டு, இன்று மாலை வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, நல்லிச்சேரி சாலையில், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மாமரத்தில் மோதி இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.