நிறுத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் நடைபெறுகிறது.
நிறுத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என தமிழக அரசு சார்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது.
மீண்டும் துவங்கும் மெகா தடுப்பூசி முகாம்:
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மே மாதம் 8 ஆம் தேதி முதல் மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுநாள் வரை நடந்தது போல இனியும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 கோடி தடுப்பூசிகள் இலக்கு:
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. 2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுகிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை.
மாநிலம் ஒன்றில் ஒரே நாளில் 1 லட்சம் முகாம்கள் நடத்துவது இதுவே முதல் முறை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.