மதுரையில் குறிப்பிட்ட நபர்களின் அனுமதி இல்லாமல் அவர்களை ரஜினி மக்கள் மன்றத்தில் இணைத்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கும் புதிய கட்சியின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒருபக்கம் கட்சியை பதிவு செய்தல், சின்னம் வாங்குதல் போன்றவற்றுக்கான பணிகளும், மற்றொருபுறம் பூத் கமிட்டி அமைத்தல், பொது கூட்ட ஏற்பாடு என ரஜினி மக்கள் மன்றத்தினர் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் ரஜினி மக்கள் மன்றத்தில் இல்லாத பலரின் புகைப்படங்கள், தொலைப்பேசி எண்களை கொண்டு ரஜினி மக்கள் மன்ற பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. “யாரை கேட்டி என் புகைப்படத்தை பயன்படுத்துகிறீர்கள்” என மக்கள் மன்ற நிர்வாகிகளை தொலைபேசி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டு கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தொடங்கும் முன்னரே இப்படியான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற சார்பில் விளக்கம் இன்னும் அளிக்கப்படவில்லை.