ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (07:39 IST)
வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது தற்போது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் அது தற்போது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ளது.  

இது இன்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய மேற்கு கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் நவம்பர் 16ஆம் தேதி ஆந்திரா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்