அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செவ்வாய், 14 நவம்பர் 2023 (20:29 IST)
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது.

இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என தகவல் வெளியாகும் நிலையில், தமிழகத்தில் இன்று கனமழை பெய்யயும் எனவும் 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று வரும் 16 ஆம் தேதி ஒடிஷா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று கூறியது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில்  14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பெட்டை, கடலூர், மயிலடுதுறை  உள்ளிட்ட 14  மாவட்டங்களிலும் , புதுச்சேரி, காரைக்கால் ஆகிய  பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்