சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

செவ்வாய், 14 நவம்பர் 2023 (20:39 IST)
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( நவம்பர் 15) விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என தகவல் வெளியாகும் நிலையில், தமிழகத்தில் இன்று கனமழை பெய்யயும் எனவும் 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று வரும் 16 ஆம் தேதி ஒடிஷா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று கூறியது.

எனவே சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு  முதலமைச்சர்  நேரில் சென்று, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையொட்டி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில்,    நாளையும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு, கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( நவம்பர் 15) விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்