ஒரே இடத்தில் நிற்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எப்போது கரையை கடக்கும்?

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (11:59 IST)
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது நகரும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியதை அடுத்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் குமரி கடல் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கலந்து 6 மணி நேரம் ஒரே இடத்தில் நகராமல் நிலை கொண்டு இருப்பதாகவும் இதனால் கன்னியாகுமரி நெல்லை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் வரும் 25ஆம் தேதி மற்றும் 26ஆம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்