உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கோலகலமாக தயாராகி வருகிறது. அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக பலரும் சுற்றுலா செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது என பிஸியாக உள்ளனர். வெவ்வேறு மாகாணங்களுக்கு செல்ல மக்கள் பெரும்பாலும் உள்நாட்டு விமானங்களை நம்பியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு, பனிப்புயல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பல பகுதிகளில் கடும் பனி காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பனிப்புயல் காரணமாக நேற்று மட்டும் அமெரிக்காவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக தயாரான மக்கள் விமான சேவை பாதிப்பால் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். பலரும் பேருந்து, ரயில் சேவைகளை பயன்படுத்தி நீண்ட நேரம் பயணித்து ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.