உள்ளாட்சி தேர்தல்: திமுக முன்னிலை; விஜய் ரசிகர்கள் 59 பேர் வெற்றி

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (22:28 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளுங்கட்சியான திமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இன்று காலை 8 மணியில் இருந்து 10 வரை வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 138 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாமக ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

1375 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவிகளில் 378 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது, 62 இடங்களில் அதிமுக முன்னிலையில் உள்ளது. பாமக 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. விஜய் ரசிகர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு 59 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்