வேல் யாத்திரை அல்ல, வால் யாத்திரையே நடத்தினாலும்... அழகிரி கமெண்ட்!!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (13:11 IST)
பாஜக வேல் யாத்திரை அல்ல, வால் யாத்திரை நடத்தினால் கூட தமிழகத்தில் எந்த மாற்றமும் வராது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து. 
 
தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை பாஜகவின் வேல் யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி கடந்த வெள்ளிக்கிழமை திருத்தணியில் யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். 
 
இந்நிலையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வேல் யாத்திரை நடத்தியே தீருவோம் என பாஜக தமிழக தலைவர் எல்,முருகன் கூறியுள்ளார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பாஜக வேல் யாத்திரை அல்ல, வால் யாத்திரை நடத்தினாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. 
 
மாநில அரசு வேல் யாத்திரையை நடத்தக்கூடாது என்று சொல்கிறது. அதை மீறி நடத்துகிறார்கள். நாட்டின் சட்ட ஒழுங்கு தான் என்ன? அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? பாஜக வேல் யாத்திரை அல்ல. வால் யாத்திரை நடத்தினால் கூட தமிழகத்தில் எந்த மாற்றமும் வராது.
 
பாஜக தற்போது முருகனை விட்டு விட்டு அவர் கையில் இருந்த வேலை எடுத்து கொண்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கு வன்முறை மீது நம்பிக்கை. தற்போது இருக்கும் உண்மையான பிரச்னைகள் திசை திருப்புவது தான் பாஜவின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்