எதிர்கட்சிகளுக்கு பயந்து தடை பண்றாங்க! – வேல் யாத்திரையில் கைதான எச்.ராஜா ஆவேசம்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (12:59 IST)
காஞ்சிபுரத்தில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெறும் வேல்யாத்திரைக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்துபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். முன்னதாக திருத்தணியிலும், திருவொற்றியிலும் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று எச்.ராஜா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் வேல் யாத்திரை நடத்தினர். அதில் பேசிய எச்.ராஜா “முதல்வர் மேட்டுப்பாளையத்தில் நடத்திய கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டொர் கலந்து கொண்டனர். அங்கெல்லாம் கொரோனா பரவாதா? எதிர்கட்சிகளின் எதிர்ப்பை கண்டு அரசு வேல் யாத்திரையை தடை செய்கிறது” என்று பேசியுள்ளார். தொடர்ந்து எச்.ராஜா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாஜகவினரை தடையை மீறி யாத்திரை நடத்தியதற்காக காவலர்கள் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்