பாஜக ’’கை காட்டும் நபரே அடுத்த தமிழக முதல்வர்’’... - .எல்.முருகன்

ஞாயிறு, 8 நவம்பர் 2020 (16:16 IST)
சென்னை திருவொற்றியூரில் இருந்து ஆலந்தூரை நோக்கித் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற பாஜகா தலைவர் எல்.முருகனை போலீஸார் 2 வத் முறையாக கைது செய்துள்ளனர்.

பாஜக தலைவர் எல்.முருகம் அக்கட்சி சார்பில்  மாநிலம் முழுக்க யாத்திரை செல்லவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் மாநில அரசு அவருக்குத் தடை விதித்தது.
இத்தடையை மீறி நேற்று திருத்தணியில் தனது ஆதரவாளர்களுடன் யாத்திரை  சென்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். அவர் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
.
இந்நிலையில் இன்று திருவொற்றியூரில் உள்ள திருவுடையம்மன் கோயிலுக்கு வந்த அவர்,  நடை சாத்தியிருந்ததால் வெளியே நின்றபடி கற்பூரம் காட்டி வழிபட்டார்.

இதையடுத்து அங்கிருந்த மேடையில் ஏறிப் பேசிய எல். முருகன் பாஜக கைகாட்டும்  நபரே தமிழக முதல்வராக வரமுடியும் என்று தெரிவித்து திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேடையிலிருந்து அவர் இறங்கியாதும் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 300 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்