கோயம்பேடு மார்க்கெட் ஜனவரி 17 ஆம் தேதி இயங்காது !

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (18:54 IST)
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வரும் ஜனவரி 17 ஆம் தேதி இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி மாக்கெட் எப்போது பரபரப்புடன் இயங்கும். தினசரி, ஆயிரக்கணக்கான மக்கள், வியாரிகள் கூடும் சந்தைக்கு தமிழகத்தின்  பல்வேறு இடங்களில் இருந்து  காய்கறிகள், பழங்கள், கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும்.

இந்த நிலையில்,   நாளை மற்றும்  மறுநாள் பொங்கல் பண்டிகையொட்டி,  தற்போது சிறப்பு காய்கறி சந்தை இயங்கி வருகிறது.

இந்தப் பொங்கலுக்கு கரும்பு, மஞ்சல், இஞ்சி, மண்பானை, வாழைக்கன்று, மண்பானை ஆகியவை அதிகளளவில் விற்பனையாகி வருகிறது.

எனவே வரும் ஜனவரி 17 ஆம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்