சம்பள உயர்வு கேட்டு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (18:11 IST)
சம்பள உயர்வு கேட்டு மேலாளரிடம் சென்ற இளம் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகுராம் என்ற பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் 30 வயது இளம்பெண் ஒருவர் பணி செய்து கொண்டிருந்த நிலையில் தனது சம்பளம் விவகாரம் தொடர்பாக மேலாளர் அழைத்ததின் பெயரில் அவரது அறைக்குள் சென்றார் 
 
அப்போது அவருக்கு போதை மருந்து கொடுத்த மேலாளர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி நிர்வாணமாக அந்த பெண்ணை வீடியோ எடுத்து தன் மீது புகார் கொடுத்தால் இதை இணையத்தில் கசிய விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்