கரூரில் "நம்ம ஊரு மோடி பொங்கல்" என்ற பெயரில் பொங்கல் திருவிழா

ஞாயிறு, 8 ஜனவரி 2023 (18:01 IST)
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அனைத்து நகர மற்றும் ஒன்றிய அளவில் "நம்ம ஊரு மோடி பொங்கல்" என்ற பெயரில் பொங்கல் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
 
இன்று காலை கரூர் வடக்கு மாநகரம் சார்பில் வெங்கமேட்டில் பொங்கல் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.V.V. செந்தில்நாதன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
 
ஏராளமான பெண்களும், குழந்தைகளும் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
 
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பானை உடைத்தல், இசை நாற்காலி, முறுக்கு உடைக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றது.
 
கரூர் வடக்கு மாநகர தலைவர் வடிவேல் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி முன்னிலையில் கரூர் மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன் மற்றும் வடக்கு மாநகர பொதுச் செயலாளர்கள் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நம்ம ஒரு மோடி பொங்கல் நிகழ்ச்சியை நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்