நிபா வைரஸ் எதிரொலி: கேரளா முழுவதும் ஊரடங்கா?

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:40 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் சமீபத்தில் நிபா வைரஸ் தாக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் பலர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் நிபா வைரஸ் பரவுவதை தடுக்க சில கடுமையான நடவடிக்கைகளை கேரள மாநில சுகாதாரத்துறை எடுத்துள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில் நிபா வைரஸ் மேலும் பரவினால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்க கேரளா அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  
 
தற்போது கோழிக்கோடு பகுதியில் உள்ள ஏழு கிராமங்கள் நிபாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மாஸ் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்