கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்: உறுதி செய்த மத்திய அரசு!

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (18:37 IST)
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



கடந்த 2018ம் ஆண்டில் கேரளாவை உலுக்கிய மோசமான வைரஸ் நிபா. இதனால் பலரும் காய்ச்சலுக்கு உள்ளாகி பலியானார்கள். இந்நிலையில் சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்ததுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த 70க்கும் மேற்பட்டோரை மாநில சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோட்டில் இறந்த இருவரும் நிபா வைரஸ் தாக்குதலால் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா உறுதி செய்துள்ளார். இதனால் கேரளாவில் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீண்டும் நிபா வைரஸ் கேரளாவில் தலை தூக்கியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்