கேரளாவின் மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தலா? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (15:51 IST)
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல் வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு உத்தரவு பெற்றுள்ளது. 
 
கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்ற மாவட்டத்தில் இரண்டு பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் அவர்கள் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் 75 பேரை கண்காணித்து வருகிறது என்றும் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
நிபா வைரஸ் தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருப்போம் என்றும் இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்