பா.ஜ.க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தினை முற்றுகையிட வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் கோவை சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களான தமிழிசை. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா. உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கூட்ட அரங்கில் கூட்டம் நடை பெற்று கொண்டிருக்கும் போது. மண்டபத்தின் வெளியே விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர் கட்சி கொடியோடு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமாவளவன் அவர்களை அவதுறாக பேசியாதாக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்., தகவல் அறிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வந்த பாஜக தொண்டர்கள் விடுதலை சிறுத்தை கட்சியினரை தாக்க .இருதரபிற்கும் கைகலப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை ஜீப்பில் ஏற்ற, அப்போதும் விடாமல் பாஜகவினர் தாக்கினர். பின்னர் பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை பேச்சு வார்த்தைக்கு பின் பாஜகவினர் கலைந்து சென்றனர். இந்நிலையில் கருப்புக்கொடி ஏந்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 5 பேரை வெங்கமேடு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.