மெர்சல் விவகாரம் ; கரூரில் பா.ஜ. க - வி.சி.க மோதல்

செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:45 IST)
விடுதலை சிறுத்தை கட்சி பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்ததையடுத்து கரூரில் விடுதலை சிறுத்தையினருக்கும், பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.


 

 
ஜி.எஸ்.டி குறித்து மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனத்திற்கு தமிழிசை சவுந்தராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், விஜய் உள்ளிட்ட நடிகர்களை வளைத்து போடவே பாஜகவினர் இப்படி நடந்து கொள்கிறார்கள் என விடுதலை சிறுத்தை தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார்.
 
அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தராஜன் ‘எந்த நடிகரையும் வளைத்து போட்டு அரசியல் நடத்த வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. அது விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு வேண்டுமானால் இருக்கலாம். அவர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்தி கட்சி நடத்துகின்றனர். அவர்களின் அலுவலகம் கூட மற்றவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டதுதான்” என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்தால், விடுதலை சிறுத்தை கட்சியினர் கொதிப்படைந்தனர்.
 
இந்நிலையில், கரூரில் இன்று காலை பாஜகவினரும், விடுதலை கட்சியினருக்கும் இடையே மோதல் எழுந்தது. கரூரில், பாஜக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பு வி.சிகவினர் கூடி தமிழிசைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால், இரு கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பதட்டம் அதிகமானதால் அங்கு போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர்.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்