ஹெச். ராஜாவின் டுவிட்டுக்கு பதில் ட்வீட் போட்ட பாடகி சின்மயி

செவ்வாய், 24 அக்டோபர் 2017 (15:56 IST)
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ என்ற திரைப்படம், கடந்த தீபாவளியன்று வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான கருத்துகள் உள்ளது என இதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள்  கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச். ராஜா ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். மேலும் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பத்திரிகை நிறுவனத்திற்கு விஜய் எழுதிய கடிதம் ஆகிய இரண்டையும் பதிவிட்டு 'உண்மை கசப்பானது' என்று ஹெச்.ராஜா டுவிட்டரில்  பதிவிட்டார். 
 
இதனால் அவருடைய டுவிட்டுக்கு பலரும் கடுமையாக பதிலளித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஹெச். ராஜாவின்  டுவிட்டை இணைத்து பாடகி சின்மயி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எது கசக்கிறது? ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூக வலைதளத்தில் பகிர்வது சட்டப்பூர்வமானதா? இதுபோன்று  உண்மையை நிரூபிக்க நாளை ஆதார் அட்டை விபரங்களை வெளியிடுவார்களா? என கேள்விகளை எழுப்பி தனது கருத்துகளை  தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்