முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா? கனிமொழி எம்.பி கேள்வி

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (09:16 IST)
தூத்துக்குடியில் சமீபத்தில் செல்வம் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த கொலைக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் கனிமொழி எம்பி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி அவர்கள் மேலும் கூறியபோது, முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா அல்லது இல்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. 
 
ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா?
 
கனிமொழி எம்பியின் இந்த டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்