அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கார் மர்ம நபர்களால் உடைப்பு: சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (09:13 IST)
அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கார் மர்ம நபர்களால் உடைப்பு
தூத்துக்குடி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது சிசிடிவி காட்சியின் மூலம் தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தட்டார்மடம் என்ற பகுதியில் செல்வம் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் நடத்திய இந்த கொலையை கண்டித்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தூத்துக்குடி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு செல்வத்தை கொலை செய்த மர்ம நபரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார் 
 
இந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென அவரது கார் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் குற்றவாளியை கண்டு பிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்