விஜய் கொடுக்காத மரியாதையை மாணவி நேத்ராவுக்கு கொடுத்த கனிமொழி..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (12:54 IST)
சமீபத்தில் நடைபெற கல்வி விழாவில் விஜய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தினார் என்பதும் பரிசளித்தார் என்பதையும் பார்த்தோம். 
 
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 600க்கு 598 மதிப்பெண் பெற்ற மாணவி நேத்ரா என்பவரை கௌரவிக்க விஜய் தவறிவிட்டதாக தெரிகிறது. விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த குளறுபடி காரணமாக அவரது பெயர் பரிசு பட்டியலில் இல்லை. 
 
இந்த நிலையில் மாணவி நேத்ரா விழா நடந்த இடத்தில் நேரில் தனது தாயாரிடம் சென்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் முறையிட்டும் அவருக்குரிய மரியாதை கிடைக்க வில்லை 
 
இந்த நிலையில் நேற்று வெளியான பொறியியல் தரவரிசை பட்டியலில் மாணவி நேத்ரா முதலிடத்தை பெற்றுள்ளார். இதனை அடுத்து பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாணவி நேத்ராவுக்கு கனிமொழி எம்பி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
விஜய் மூலம் கிடைக்காத மரியாதை கனிமொழி மூலம் கிடைத்ததை அடுத்து மாணவி நேத்ரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்