மாஸ் கெட்டப்பில் விஜய்.... ''லியோ'' ஷூட்டிங் பகுதியில் குவிந்த ரசிகர்கள்

திங்கள், 26 ஜூன் 2023 (19:07 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை செவன் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தில், திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மன்சூர் அலிகான், சஞ்சய் சத், அர்ஜூன்  உள்ளிட்ட நடிகர்கள் வில்லன்கள் வேடத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில்  ரிலீஸாகவுள்ளது.

கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி, லியோ படத்தின் முதல் சிங்கில் நா ரெடி என்ற பாடல் வெளியாகி 2 ½ கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில்,  லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆந்திர மாநில  ரசிகர்கள், லியோ பட  ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்தனர்.  அப்போது, விஜய் ரசிகர்களுக்கு  சிரித்தபடி கை  அசைத்து அங்கிருந்து பாதுகாவலர்களுடன் நகர்ந்து சென்றார்.இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

லியோ படத்தில் விஜய் 2 கெட்டப்புகளில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்