பதவி வந்தால் நடிப்பதை நிறுத்திக்கொள்வேன்: எந்த பதவி கமல் சார்?

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (20:01 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விஸ்வரூபம் 2 ரிலீஸாகவுள்ள நிலையில், இது குறித்து இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் அரசியல் மற்றும் சினிமா குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். 
அவர் கூறியது பின்வருமாறு... விஸ்வரூபம் 2 காஷ்மீரில் வாழும் ஒரு ராணுவ வீரரின் கதை. அவன் தேசத்திற்காகவும், மதத்திற்காகவும் எப்படி வேறுபடுகிறான் என்பதை இப்படத்தில் காட்டி உள்ளோம். 
 
இந்த படத்தில் எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தேச துரோகியாக இருப்பதுதான் தவறு என்று வசனம். சினிமா என் தொழில். இதை செய்தால்தான் பிழைப்பு நடத்த முடியும். 
 
ஒரு ரூபாய் வாங்கி கொண்டு சேவை செய்வேன் என்றெல்லாம் உட்டாலக்கடி செய்ய முடியாது. கட்சி பணியில் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். இது எனது கடைசி படம் அல்ல. 
 
அரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை தியாகம் செய்யமாட்டேன். அரசியலில் இருக்க பணம் வேண்டும். இங்கு யாரும் தியாகங்கள் செய்யவரவில்லை. எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பின்னரும் படங்களில் நடித்து கொண்டே இருந்தவர்தான். 
 
நானும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். எப்போது எம்எல்ஏ என ஒரு பதவி வருகிறதோ அப்போது தேவைபட்டால் நடிப்பதை நிறுத்தி கொள்வேன் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்