கமல்ஹாசனுடன் போட்டி போடுவதை தவிர்த்த நயன்தாரா

செவ்வாய், 24 ஜூலை 2018 (20:53 IST)
ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் ரிலீஸ் என்றாலே மற்ற படங்கள் அந்த படங்களுடன் ரிலீஸ் செய்வது பெரும்பாலும் தவிர்க்கப்படும். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தில் கமல்ஹாசனின்  'விஸ்வரூபம் 2' வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வேறு எந்த படங்களின் ரிலீஸ் தேதியும் அந்த நாளில் அறிவிக்கப்படவில்லை
 
ஆனால் திடீரென நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் அதே ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கமலுடன் நயன்தாரா போட்டியா? என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் நடந்தன.
 
இந்த நிலையில் கமலுடனான போட்டியில் இருந்து நயன்தாரா படம் தற்போது பின்வாங்கிவிட்டது. ஆம், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் கமல்-நயன்தாரா மோதல் தவிர்க்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்