அதிமுக கோட்டை தகர்கிறது: கோவை குறித்து கமல்ஹாசன் டுவீட்

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (20:39 IST)
அதிமுக கோட்டை தகர்கிறது: கோவை குறித்து கமல்ஹாசன் டுவீட்
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் 5வது கட்ட தேர்தல் பிரச்சாரமாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் கோவையில் தனது கட்சியின் போஸ்டர்கள் மற்றும் கொடிகள் காவல்துறையினரால் அகற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் சற்று காட்டமாகவே இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?
 
காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்