விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (11:11 IST)
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானதில் நேற்று ஆன்லைன் சூதாட்டம், தனி அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதேபோல் இன்று தாக்கல் செய்யப்பட்ட சட்ட முடிவுகளில் ஒன்றாக, விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை சட்ட பேரவையில் தாக்கல் செய்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன். 
 
அதாவது தற்போது வேலூரில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் மறைந்த ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்ய இருக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்