மீண்டும் இ-பாஸ் அறிமுகம்....தமிழக அரசு அதிரடி

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (16:11 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு அத்தியாவசிய பயணம் மேற்கொள்ல அம்மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ –பாஸ் பெற்றுக் கொண்டால் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.மேலும்  மேற்கூறிய ஊரைச் சேர்ந்தோர்கள் உரிய ஆவணங்களைக் காவலர்களிடம் காண்பித்து பயணிக்கலாம்.

அத்துடன் வாடகை வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, என 11 மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகம் உள்ளதால்,  இங்கு தவிர பிற மாவட்டங்களுக்கு வாடகை வாகனங்களில் இ –பாஸ் செல்ல அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்