ரேசன் கடை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திங்கள், 22 பிப்ரவரி 2021 (21:18 IST)
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தமிழக அரசு அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக அரசு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் அடுத்த சலுகையாக ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை தமிழக அரசு உயர்த்திய விபரங்கள் பின்வருமாறு: ரேசன் கடை விற்பனையாளர்கள் தொகுப்பூதியம் ரூபாய் 5000ல் இருந்து 6250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூபாய் 4250 இலிருந்து ரூபா 5500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது 
 
இது குறித்த அரசாணை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இன்னும் பல சலுகைகளை அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்